Friday, November 12, 2010

கிராமங்களை ஒழித்த சரக்கு..



ஒரு காலத்தில் காலை முதல் மாலை வரை தோட்டத்தில் வேலைப்பார்த்துவிட்டு சாயும்காலத்தில் சாராயக்கடையில் தலையை மோந்து சாராயம் குடித்தவர்களை பார்த்திருக்கிறேன். அவர்களுடன் வாழ்ந்தும் இருக்கிறேன். ஆனால் இன்றைய கிராமங்களை நினைக்கவே பயமாய் இருக்கிறது எங்கு பார்த்தாலும் யாரைப்பார்த்தாலும் மதுவிலேயே கரைகிறார்கள்.
நகரத்தில் இருப்போர்களுக்கு தினமும் 8 மணி நேர வேலை இருக்கிறது அதற்கு பிறகுதான் சரக்கடிக்கிறார்கள், ஆனால் கிராமத்தில் அப்படி இல்லை காலையில் வேலைக்கு போகும் போதே ஒரு குவாட்டரை உள்ள விட்டுகிட்டுதான் போறாங்க மீண்டும் மாலையில் வந்ததும் தொடர்கிறது. ஒருகாலத்தில் வீட்டில் விசேசம் என்றால் தண்ணி அடித்தவர்கள் இன்று தினமும் தண்ணி அடிக்கிறார்கள். ஏன் எப்போதும் பாக்கெட்டில் பாட்டிலை வைத்து தண்ணி அடிக்கும் இளைஞர் முதல் வயதானவர்கள் வரை பார்த்தேன். பெண்கள் எல்லாம் கோவில் வாசலின் ஆண்கள் எல்லோரும் டாஸ்மாக் வாசலில்.

எங்கு போகும் இந்த நிலை பயமாய் இருக்கிறது. ஊருக்கு ஊர் தாபா எப்போதும் தண்ணியிலேயே தவிக்கிறது இன்றைய கிராமத்து இளைய சமுதாயம், அரசாங்கம் அவர்களுக்கு ஊத்தி கொடுத்து கொண்டிருக்கிறது?

No comments:

Post a Comment